தன்னிலை உணர்ந்துகொள்
ஒளிரும் நிலா குளிரும் நதியிலே
மிதந்ததே!
தன்னை கண்டு
பாதி விண்ணீலோ மீதி நீரிலொயென
கலங்கியதே!
இரவின் இருள் தன்னிலும் விழுவதை
மறந்ததே !
நாட்கள் நகர்ந்தது
தன் வாழ்க்கை வளர்ந்து தேய்ந்து மறைந்து தோன்றுவதென
புரிந்ததே!
நிலவே!
விழி மூடி
பார்த்ததை எண்ணி பார்
தோற்றத்தில் மாற்றம் உலகிற்க்கு மட்டுமேயென
தெளிந்து தன்னிலை உணர்ந்துகொள்!