முற்றத்தில் முழுமதி

நீண்ட ஓடையில்...
நித்தம் காண்கிறேன் !
ஓடும் சலசலபிலும்
ஓயாமல் தோன்றும் உன் அழகை
காண்கையில்...
வியக்க ஆசைதான்?
விடியல் வரும் முன்பே!
ஆதலால்,
வீதி கடந்து ஓடினேன்...
முற்றம் நின்று உனை காண
மூச்சிரைக்க...
மது தராத மயக்கத்தில்
மதியிழந்து ரசிக்கிறேன்...
முழுமதியாய் நீ வருவாய் என்றே!
ஏதோ,
மனம் அறியாத தயக்கம்
மானிடன் என்னிடம்...
வருடிய தென்றல் வாட்டாதபோது
உனை வருடும் மேகங்களை
கண்ட பின்பு...
அந்த காட்டாட்டு மேகங்களுக்கிடையே காதலுக்காக போரிட தயார் !
அனுமதி அளிப்பாயா?
என்னவளும் பொறாமை பட...

எழுதியவர் : தியா (2-Aug-20, 11:00 am)
சேர்த்தது : DHIYA
பார்வை : 98

மேலே