நிலவே நீ தனி அழகு

வானத்து நிலவே
"நீ" யாருக்கும்
எட்டாத இடத்தில்
வட்ட வடிவில்...! !

ஆனா...! !
மனித வாழ்க்கையின்
பருவ காலங்களில்
உன் அவதாரங்கள்
பலவிதம்...! !

குழந்தை பருவத்தில்
"அம்புலி மாமா"
வடிவில் கதையாக...!

வாலிப பருவத்தில்
"காதலி" வடிவில்
கவிதையாக...! !

முதிர்ந்த பருவத்தில்
"விரத பூஜை" வடிவில்
வணங்கும் கடவுளாக...! !

எது எப்படியோ...
எல்லோரும் ரசிக்கும்
வடிவில்..."நீ "
வளர்ந்தாலும்
தேய்ந்தாலும்
வானத்தில் இருப்பது
தனி அழகு...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Aug-20, 9:33 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 654

மேலே