நூலகம்
நூலகம்
சாதி பிரித்துறையும்
நூல்களின் சமத்துவபுரம்!
அமைதிக் களத்தில்
பயிராகும் அறிவின் தோட்டம்!
தேடல் பசியை ஆற்றிவைக்கும்
ஞான சத்திரம்!
நேரத்தை நேர்த்தியாய்த்
திரிக்கும் நெசவுக் கூடம்!
கவிஞர்களை உருவாக்கும்
கருவூட்டல் மையம்!!
மேதைகளை மெருகேற்றும்
மென் சாதனக் கூடம்!
காலங்கடந்தவரின் காலடி
காக்கும் கலைக்கூடம்!
அறிவைத் தீட்டி கூர்மையாக்கும்
ஆயுதக்கூடம்!
சொற்களங்சியங்களைக் காட்சிப்படுத்தும்
அருங்காட்சியகம்!
சொல்லோவியங்கள்
வரைந்து வைத்த காகிதக் கூடம்!
படைத்தவனை பறைசாற்றி நிற்கும்
பண்பாட்டின் சதுக்கம்!
சு.உமாதேவி