நிறைமதி

அன்னையவள் அமுதமூட்ட தன் தங்கத்தை இடையில் வைத்து இரவினில் நிறைமதியே உன்
அழகிய முகம் காட்டுவாள்...

மழலையின் எட்டி பார்க்கும் ஓரிரு
வெண்பற்கள் அழகினை ரசித்தபடி
தன் உயிரின்
பசியாற்றுவாள்....

நிறை மதியே

மங்கையரின்
நெற்றியில் மங்களகரமான
வட்ட வடிவில் நீ
பல வண்ணங்களில்
வாசம் செய்கிறாய்...

காதலன் தன்
காதல் மனைவியை
நீலாபெண்ணே...
அந்த நிலவும் தோற்று போகுமடி
உன் அழகில் என வர்ணிக்கும் வார்த்தைக்கும்
சொந்தமான நிறை மதியே....

உன் நீல படுக்கையில்
துயில் கொள்ள
இரவில் வந்து விடுகிறாய்...

ரசிக்க ரசிக்க
வார்த்தைகள்
போதவில்லை
என்னில்....

எழுதியவர் : சங்கீதா (31-Jul-20, 10:26 pm)
பார்வை : 342

மேலே