இயற்கை
பாலாறு..... நீர் எங்கே போனது
மேலாக பாயும் நீரை களங்கம் செய்யும்
மனிதருக்கு அஞ்சி நிலத்தின் கீழ்
நில அடி நீராய்ப் பாய்கிறது.....அப்பவும்
தன்னை நிராகரிக்கும் மகனுக்கும்
பாசம் பொழியும் தாய்ப்போல்
நிலத்தடியில் இருந்தும் மனிதரின்
நீர்த்தேவையைப் பூர்த்தி செய்திட
இன்னும் என்ன வஞ்சகர் தன் மணலைக்
கொள்ளையடித்தாலும் அவர்களையும்
விட்டுவைத்து மன்னித்து....
நதி ..... இயற்கையின் அன்பு புத்திரி
மனிதரை வாழவைக்கும் தாய்...
தாயையே புறக்கணிக்கும் மனிதன் !