புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 45---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௫

441. ஒரு நிலத்தின் பெருமகளைப் பேசி பேசியே
அந்த நிலத்தைப் பிடிப்பதற்கு ஒத்திகை செய்வான் சூழ்ச்சிக்காரன்.

442. உன்னிடம் இருந்து ஒன்றைப் பெறுவதற்கு
உனக்குப் பிடித்தவனாய் வாழ்வது போல் நடிப்பார் சிலர்
அவர்களைத் தூரத்திலே வை.

443. உனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும்
முதலில் அறிவு என்ற ஆயுதத்தையே ஏந்து.

444. தாவரங்கள் உணவைத் தரைக்கு மேலும் கீழும் சேமிப்பது போல்
மனிதர்கள் சிலவற்றை உள்ளும் சிலவற்றைப் புறமும் வைத்து வாழ்வார்கள்.

445. வாழ்வாதாரத்தை அழித்து வளர்ச்சியைக் கட்டமைத்தல்
கண்களைப் பறித்து விட்டுக் கண்ணாடி கொடுப்பதற்குச் சமம்.

446. ஒடித்து வளர்க்காத முருங்கை முறிந்து விழுவது போல்
உள்ளத்தின் குறை நீக்காது உயர்ந்தாலும் மதிப்பு மண்ணில் சாயும்.

447. தனிமை எப்போதும் எல்லாருக்கும் சுகம் தருவதில்லை
சிலநேரம் சிலருக்கு அது அருமருந்து
சிலருக்கு அது அருவெறுப்பு.

448. தனிமை என்பது ஓர் அறிவியல் விஞ்ஞானி
அது மனதின் இன்ப துன்ப அறிகுறிகளைப் பொருத்தே செயல்படும்.

449. மனிதர்களின் தவறான செயல்கள் அதிகரிக்கும் போது
உலகம் ஒரு பேரழிவைச் சந்தித்துத் திரும்பும்.

450. உதிர்ந்த இலையோ? பூவோ? மீண்டும் கிளைக்குத் திரும்புவதில்லை
உனக்கான வாய்ப்புகளும் அப்படித்தான்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (7-Aug-20, 9:55 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 201

மேலே