முட்டுக்கட்டை
முட்டுக்கட்டை
தெளிவாய் நீயும் தமிழ்த்தெளி தேனே
தெரிந்த வள்ளுவனை சமணன் என்றாய்
இருக்குமா நல்குறிப் பேதும் உன்னிடம்
பெரியா ருக்கும் தமிழுக்கும் உறவென்ன
வித்தகனா தமிழில் அவனுமே விளக்கு
எவனையும் கட்டியே அழுவீரோ மூடரே
தமிழர்க்கு வள்ளுவன் பாதை போதாதா
தமிழர்க்கு பாதை போட்டானாம் அறிவீலி
அடுக்கடுக் காக ஆயிரம் பாதை
சமைத்த முன்னோரை மறந்தாய் ஏனோ
முட்டுக் கட்டைத் தேர்ந்துபின்
ஆதரிப்ப துமேனோ சொல்லுமே தமிழரே