ந , ண ன எங்கெல்லாம் வரும் -- ஒரு விளக்கம்

தமிழில் னகரம் , ணகரம் , நகரம் எங்கெல்லாம் வரும் ? எழுத்து பிழை இல்லாமல் எழுதிட சில எளிய விளக்கங்கள் இதோ .

மூன்று சுழி ண , ரெண்டு சுழி ன மற்றும் நகரம் என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு .

ண இதன் பெயர் டண்ணகரம்

ன இதன் பெயர் றன்னகரம்

ந் இதன் பெயர் தந் நகரம் என்பதே சரி .

மண்டபம் , கொண்டாட்டம் - என எங்கெல்லாம் மூன்று சுழி ணகர ஒற்றெழுத்து வருகிறதோ அதையடுத்து வரும் உயிர்மெய் ட வர்க்க எழுத்துக்களாகத்தான் இருக்கும் . இதனால் இதற்கு டண்ணகரம் என்று பெயர் .

தென்றல் , சென்றான் -- என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி ன கர ஒற்றெழுத்து வருகிறதோ அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும் . இதான் இதற்கு றன்னகரம் என்று பெயர் .

இது இரண்டும் என்றுமே எங்குமே மாறி வராது .

நகரம் என்பதை த ந்நகரம் என்று தான் அழைக்க வேண்டும் . ந் எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே . எடுத்துக்காட்டு பந்து , வெந்தயம் , மந்தை , சந்தை ,கந்தை , விந்தை ,

மேற்கண்ட விளக்கம் எளிமையாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (11-Aug-20, 5:59 pm)
பார்வை : 37

மேலே