கணவன் என்ற சொல்லுக்கு தமிழில் வழங்கப்படும் வேறு சொற்களின் பட்டியல் இதோ

கணவன் என்ற சொல்லுக்கு தமிழில் பல வேறு பெயர்கள் இருக்கின்றன . ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உள்ளது . இந்த பெயர்கள் செயலை , உணர்வை அடிப்படையாக கொண்டு தோன்றியவைகளே .தமிழ் மொழியின் ஆழத்தை இந்த பெயர்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

கணவன் -- கண் அவன் , கண்ணைப் போன்றவன்

கொழுனன் -- கொழுகொம்பைப் பற்றி வளரும் கொடி போல , மனைவிக்கு கொழுகொம்பைப் போன்றவன் .

துணைவன் -- வாழ்க்கைத்துணைவன் , பெண்ணின் துணைவன்

அகமுடையான் -- அகம் , உள்ளம் , இல்லத்துக்கு உடையவன்

வீட்டுக்காரன்

என்னவன்

மனையான்

மணாளன்

மணவாளன்

உற்றான்

கொண்டவன்

தலைவன்

கேளவன்

கோமகன்

தவன்

மன் -- கணவன் , மண் என்றால் soil

நாச்சியன்

நாதன்

விழைந்தோன்

வேட்டன்

கூந்தற்கிழார்

ஆள்

ஆளன்

இள

உற்றான்

அநுகன்

ஆம்பான்

இயமான்

இல்லான்

இல்லவன்

கிழவன் , கீழ்த்தியின் எதிர்சொல்

உரியவன்

உடனிகழ்வான்

தலைமகன்

தம்போன்

குடும்பி

தாட்டான்

மகி ணன்

பத்தன்

கண்ணாளன் , கண்ணாட்டி யின் எதிர்சொல்

அன்பன்

நன்றி

எழுதியவர் : வசிகரன் .க (11-Aug-20, 5:41 pm)
பார்வை : 33

மேலே