மனைவி என்ற சொல்லுக்கு எத்தனை வேறு பெயர்கள் தமிழில் இருக்கின்றன -- படியுங்கள் இங்கே

மனைவி என்ற சொல்லுக்கு தமிழில் பல வேறு பெயர்கள் இருக்கின்றன . ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உள்ளது . இந்த பெயர்கள் செயலை , உணர்வை அடிப்படையாக கொண்டு தோன்றியவைகளே .தமிழ் மொழியின் ஆழத்தை இந்த பெயர்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

துணைவி -- வாழ்க்கைத்துணைவி

கடகி

கண்ணாட்டி

கற்பாள்

காந்தை

வீட்டுக்காரி

கிருகம்

கிழத்தி

குடும்பினி

பெருமாட்டி

பாரியாள் -- இதே சொல் மலையாளத்திலும் உள்ளது இதே பொருளில்

பொருளாள்

இல்லத்தரசி

மனையுருமகள்

வதுகை

வாழ்க்கை

வேட்டா ள்

விருந்தினை

உல்லி

சானி என்றால் மனைவி , சாணி என்பது மாட்டின் கழிவு

சீமாட்டி

சூரியை

சையோகை

தம்பிராட்டி -- இந்த சொல் இதே பொருளில் மலையாளத்திலும் உள்ளது

தம்மெய்

தலைமகள்

தாட்டி

தாரம்

மனைவி

நாச்சி

பரவை . பரவை என்ற சொல்லுக்கு கடல் என்ற பொருளும் உண்டு . பறவை என்றால் பறப்பன .

பெண்டு

இல்லாள்

மணவாளி

கோமகன்

தலைவி

அன்பி

இயமானி -- இந்த தமிழ் சொல்லில் இருந்து வந்தது தான் எஜமானி என்ற சமஸ்க்ருத சொல்

தலைமகள்

ஆட்டி

அகமுடையாள் -- உள்ளத்தின் அகத்தில் இருப்பவள் என்று பொருள் . இதன் ஆண்பால் தான் அகமுடையான் என்பது . இந்த சொற்களே காலப்போக்கில் ஆம்படையான் என்று மருவி வழங்குகிறது .

பெண்டாட்டி

மணவாட்டி

ஊழ்த்துணை

மனைத்தக்காள்

விருத்தனை

இல்

காந்தை

பாரியை

மகடூஉ

மனைக்கிழத்தி

குலி

வல்லபி

வனிதை

வீட்டாள்

ஆயந்தி

ஊடை -- ஊடலின் ஊடேயும் இருப்பவள்

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (11-Aug-20, 5:28 pm)
பார்வை : 2159

மேலே