பிரேமின் உயர்வு
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு
இளைஞன் ஒருவன்.. அவன்பேர்
பிரேமானந்த் சுரேந்திரன்...
கிராமத்துப் பள்ளிகளில்..
அரசுப் பொறியியற் கல்லூரியில்
கல்விபெற்று இடம் மாறிவந்தான்...
இன்று சென்னை பெருநகர
வளர்ச்சிக் குழுமத்தின்
தலைமைப் பொறியாளராக...
தடம் பதித்து நின்றான்...
முயற்சிதன் மெய்வருத்தக்
கூலி தரும்... குறளுக்கு
வரிகளில் உரை எழுதாமல்
தன் வாழ்க்கையையே
உரையாக எழுதி
பதவி உயர்வு பெறும்
நண்பன் பிரேமிற்கு
என் அன்பான பாராட்டுதல்கள்...
சென்னை எழும்பூர் தாளமுத்து
நடராஜன் மாளிகை... ஐந்தாம்
தளத்தில்... ஆறடி உயரம்
பிரேமானந்த் சுரேந்திரனின்
பணிகளின் நேர்த்தி கண்டு
யாரடி இவர்... என மூக்கின் மேல்
விரல் வைத்து தாய்க்குலம்
வியந்து பாராட்டும்...
உன் வேலைகளின் புதுமைகளில்..
ஆர்வ அர்ப்பணிப்புகளில்...
சென்னைவாழ் சமூகம்
மகிழ்ந்து பாராட்டும்...
நம்பிக்கை இருக்கிறது...
பொறுப்புகளைச் சிறப்பாய் செய்வாய்...
இன்னும் பேரும்புகழும் பெற்று
மென்மேலும் உயர்வாய்...
சென்னை வளர அன்னையின்
ஆசிகளுடன் புதியன தருவாய்...
நண்பனுக்கு அன்பை
மகிழ்ந்து சொல்கிறேன்
வசந்த வாழ்த்துக்களாய்...
👍🙏👏🌹❤😃

