தமிழக போலீஸ்
தமிழக போலீஸ்.
ஆயிரம் குறைகள் அவர்கள் மீது சுமத்தினாலும்
ஆயிரம் பேர் கூடும் இடத்தில் அவர்கள் இல்லையேல்
சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கும்.
காக்கி சட்டை போட்டவுடன்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
எப்படி அவர்களுக்குள்
நுழைகிறது.
தைரியம் தன்னாலே பிறக்கிறது.
மிடுக்கு, கம்பீரம்
ஆளுமை மேலும் அழுகு சேர்க்கிறது.
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும்
போலீஸ் கூப்பிட்டால்
ஒரு நொடியாவது மனதில் ஒரு திக் வந்து தான் போகும்.
பயம் கலந்த மரியாதை
மனதில் வரத்தான் செய்யும்.
இது நடைமுறை உண்மை.
நாட்டை காக்க இராணுவம்.
நம் ஊரைக் காக்க காவல்துறை.
பணி மலையிலும், பள்ளத்தாக்கிலும்,
கண் அயராமல் நாட்டை இராணுவம் காக்காவிட்டால்
நாடு நாடாக இருக்குமா?
ஊரைக் காக்க
இருபத்தி நான்கு மணி நேரமும்
நாள், கிழமை என்று பாராமல்
பண்டிகை தினத்திலும்.
தன் குடும்பம், உற்றார் உறவினர்,
நண்பர்கள் என்று எல்லாம் துறந்து
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று விழிப்புடன் மக்களுக்காகக் களம் இறங்கும் நம் தமிழக போலீஸ் பாராட்டத்தக்கது
மட்டும் அல்ல போற்றத்தக்கது.
சென்னையைப் போல் பெரும் நகரங்களில்
காலையிலும், மாலையிலும் 
கடுமையான போக்குவரத்து நெரிசலை
மிக இலகுவாக இவர்கள் சரி செய்யவில்லை என்றால்
உண்மையில், எல்லோரும் மணிக்கு தன் பணியிடத்தை அடையத்தான் முடியுமா? இல்லை நேரத்திற்கு வீடு வந்து சேரத்தான் முடியுமா?
கோயில் திருவிழாவா!
கூட்ட நெரிசலை கட்டுபடுத்த 
இவர்களைத் தவிர வேறு யாரால் முடியும்.
பெரிய தலைவரின் அரசியல் கட்சி கூட்டமா!
சட்டம் ஒழுங்கை இவர்கள் காப்பாற்றா விட்டால்
அங்கே நிச்சயம் கலவரம் அறங்கேறும்.
ஆன்மீக ஊர்வலமா
போலீஸ் தயவு இன்றி
ஊர்வலம் ஒரு அடி எடுத்து வைக்க தான் முடியுமா?
ஒரே ஒரு நாள் தமிழக போலீஸ்
வேலை நிறுத்தம்( சட்டத்தில் இடம் இல்லை) செய்தால்
தமிழ் நாடு ஸ்தம்பித்து விடும்.
சட்டம் ஒழுங்கு கேலி குத்தாகிவிடும்.
போக்குவரத்து நிலைகுலைந்து விடும்.
பெண்கள் பாதுகாப்பு
கேள்வி குறியாகிவிடும்.
நிச்சயம் திருடு, கொள்ளை மலிந்து விடும்.
மக்கள் மனதில் பீதி வந்துவிடும்.
போலீஸ் என்றால் ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைத்தவர்களுக்கு
போலீஸ் தேவை அப்போது தான் புரியும்.
போலீஸின் மகத்துவம் அப்போது தான் உணர முடியும்.
ஒரே வரியில்.....
போலீஸ் உற்ற நண்பன்
போலீஸ் சமூகத்தின் அறன்.
தமிழக காவல்துறைக்கு என்னுடைய 
கிரேட் சலுயூட்.
- பாலு.
 

