இரவு பயணம்
வெளி ஊரிலிருந்து
சொந்தவூர் கிளம்பும்
எல்லா பேருந்துகளும்
மனித சுமையுடன்
துணி சுமையை
தாங்கி செல்லும்
அதே பேருந்துகள்...
சொந்த ஊரிலிருந்து
வெளியூர் போகையில்
மனித சுமையுடன்
ஏதோ ஒருவகை
மன சுமையையும்
தாங்கி செல்லும்
ஆண்டுகள் பலவாயினும்
அப்பயணி யாராயினும்...
-------------------
சா.சரவணன்