நம்பிக்கை

நம்பிக்கை
---------------
நம்பியவனை எந்நாளும்
கைவிடாது நம்பிக்கை..
உறுப்பு சில குறைந்தாலும்
உடனிருக்கும் நம்பிக்கை..
நல்லதை நினைப்போரை
நாடிடுமே நம்பிக்கை..
ஊர் தூற்றி பேசிடினும்
உடனுடையாது நம்பிக்கை...
சேர்த்த செல்வம் மறைந்திடினும்
உடன் மறையாது நம்பிக்கை..
உன் சுற்றமது சோர்ந்திடினும்
தேற்றிடுமதுன் நம்பிக்கை..
கொடிய நோய் நாடி வருமாயின்
விரட்டிடுமதுன் நம்பிக்கை..
எந்நோய்க்கும் முதல் மருந்து
உன்னிடமிருக்கும் நம்பிக்கை..
சுத்தமும் விழிப்புணர்வும் சேர்த்திடுமே
உன்னுள் திட நம்பிக்கை..
++++++++++++++++++
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Aug-20, 10:36 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : nambikkai
பார்வை : 1174

மேலே