பேருந்து படுக்கை
பேருந்து படுக்கை...
_-------------------------
சுவாச காற்றை அனுமதிக்கும்
மாதிரி சவப்பெட்டி...
ஒலிவொளியையும் அனுமதிக்கும்
நகரும் உயிர்ப்பெட்டி..
குறட்டை சத்தத்தை வெளியேற்றும்
குறுகிய உயிர்ப்பெட்டி..
தளர்ந்து வருவோரை தாலாட்டிடும்
தாயின் மடிப்பெட்டி...
புரண்டு படுக்க அனுமதியா
புழுக்கம் தரும் பெட்டி..
தினமும் புதிய உடல் காணும்
இருண்ட இருட்டுப்பெட்டி..
--------------------------
சா.சரவணன்