அப்பாவின் மரணம்

எங்களுடைய முகவரியின்
முதலெழுத்தும் நீயே !
எங்களுடைய வாழ்க்கையின் தலையெழுத்தும் நீயே !
எங்களை நன்கு செதுக்கிய
சிற்பியும் நீயே !
எங்கள் தவறை கண்டித்த
கோலும் நீயே !
நேர்மைக்கு உன்னையே
வழிக்காட்டி நீயே !
கடினமான உழைப்புக்கு
சொந்தமும் நீயே !
அம்மாவுக்கு ஊன்றுகோலும்
நின்றதும் நீயே !
குடும்பத்தை தாங்கும்
தலைவனும் நீயே !
உன் இரத்தமெல்லாம் தினமும்
வியர்வையாய் பேனதே !
அதனாலே நாங்களெல்லாம்
வெற்றியாய் நின்றோமே !
உன்னைப்போல் வழ்வதை
பார்க்க நீ இல்லையே !
கண்ணீருடன்,
கருங்கல் சேகர்ஜினி.

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (18-Aug-20, 9:22 am)
Tanglish : appavin maranam
பார்வை : 1475

மேலே