அம்மாவின் மரணம்
பலவித கவிதை எழுதினேன்
அனைத்தும் சமூகத்தை பற்றியே
ஆனாலும் என் அம்மாவின்
அன்பை நினைத்துப்பார்த்து
ஒற்றைவரி எழுதல்லையே...
என் தாயி அவள் உறங்க
நான் மட்டும் முழித்திருக்க
இனியென்ன எழுதினாலும்
எப்படி நான் புரியவைப்பேன்
யாரிடம் போய் இதைசொல்ல...
என் உயிர்தந்த நல்லுறவே
உன்னைப்போல் அரவணைக்க
இத்தரணியில் யாருண்டு
முடியாமல் நீயிருந்தாலும்
உன் கடமையை மறந்ததில்லை...
மரணம் ஒரு மாயசொல்லோ
அது தூக்கத்தின் தொடர்ச்சியோ
இன்று சொர்க்த்தின் வாசலிலே
எனக்காக காத்திரு என்றாவது
ஒருநாள் நிச்சயமாய் வருவேன்...
நன்றி சேகர் ஜினி