நான் வீழ்வேன் என்று நினைத்தாயா
பெரும் தவறு இழைத்து நாலு
பேரும் முன் -நான்..!
நேரும் அவமானம் தாங்காமல்
சிலரும் பழிச்சொல் சொல்ல..!
அவமானம் தாங்காமல் நான்
தன்மானம் இழிந்து..!
என்மனம் பெருங்குற்ற இழைத்துபோல்
என்மானம் பறி போனதே..?
பிறர்முன் குனிந்த நிமிருமால்
சிலர்முன் பனிந்து நின்றும்;
முன்னர் முகத்துக்கு முன் இருந்தும்
பின்னர் முதுகுக்கு பின்..!
புறம் பேசும் அறம் இல்லாதவர்
தரம் தாழ்த்தி நினைப்பார்..!
நிறம் இங்கு வேறுவேறு -மனிதடர்க்கு
கரம் பிடிக்க -யாருமில்ல;
வீழ்ந்த பின் உடனே -நம்
எழுந்து விட வேண்டும்..!
ஆழ்ந்து அனுதாபம் கிட்டாது -மக்கள்
சூழ்ந்த புன்னகை செய்வீர்..!
நான் வீழ்வேன்
வெ(எ)ன்று காத்து நிற்கும்..
உன்முன் நான் வீழ்வேன்
வெ(எ)ன்று நினைத்தாயா..?
❤️💪🔥🔥🔥🔥🔥🔥💪❤️
✍️பாரதி