பாரதி பிரபா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாரதி பிரபா |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 10-Jul-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 2419 |
புள்ளி | : 30 |
மழைக்காலங்களில்
எனக்கு மழை மட்டும்
பிடிப்பதில்லை!
மழைக்கு முன் வரும்
வானவில் ரசிக்க
பிடிக்கும்!
மழைத்துளிகளை
கைகளில் பிடித்து
விளையாட பிடிக்கும்!
பிம்பங்களில்
விழுந்த மழைத்துளிகளில்
அவள் பெயர் எழுதி
ரசிக்க பிடிக்கும்!
மழையில் மழலையாக
துள்ளி விளையாட
பிடிக்கும்!
குளிர் மழையில்
கொஞ்சம் தேனீர்
அருந்துவதற்கு
பிடிக்கும்!
மழையில் கொஞ்சம்
பெரும் கவிதை
எழுத பிடிக்கும்!
இலை மேல்
விழுந்த மழைத்துளிகள்
தலை மேல்
விழுவது பிடிக்கும்!
மழைக்கு முன்
வீசும் மண்வாசனை
பிடிக்கும்!
மழைத்துளிகளின்
சங்கீதம் இசை கேட்க
பிடிக்கும்!
துளி துளியாய் சேர்ந்து
ஓடும் நதிகள்
#ஒரு பெண்ணின் பாவக்கதை
பத்துநாள் கருவறையில்
இளம் சிசு!
விதியின் பரிசு
விதவை கோலம்!
ஒரு தாயின்
போராட்டம்!
ஒரு இளம் சிசுவின்
எதிர்காலம்!
எத்தனை சோதனைகள்
காத்திருக்கிறதோ?
எத்தனை வேதனைகள்
தாங்குவளோ?
அந்த இறைவனுக்கு
இவ்வளவு தான் கருணையா?
அவளின் விதியை
தலையில் சுமக்கிறாள்?
தலைவிதி என்று!
எத்தனை நாள்
மனசுக்குள் குமுறி இருப்பாள்?
எத்தனை நாள்
தூக்காமல் அழுத்து இருப்பாள்?
அவளை ஒரு முறை
சிரித்து வைத்து பார்க்க
வேண்டும் என்ற மட்டும்
என்னோடு தொத்தி
விட்டது ஒரு எண்ணம்?
ஒரு வாய்ப்பு
கிடைத்தால் போதும்
ஒரு முறை அவளை
சிரிக்க வைத்து
அணைத்துக் கொள்வேன்!
🖤😌💔😌💔😌💔😌🖤
ஒரு சிறு முத்தம்
போதுமடி ஒரு சில
மணித்துளி!
நான் அப்படியே
உறைந்து விடுவதற்கும்!
நான் இப்படியே
செத்துப் விடுவதற்கும்!
முத்தமா அது?
மொத்தமாய் விற்பனை
செய்யக் கூட
என் காதலுக்கு!
நீ எனக்கு ஒரு முத்தம்
கொடுத்தால்!
நான் உன்னிடம்
திரும்ப திரும்ப ஓராயிரம்
வாங்க தான் நினைப்பேன்!
எதற்கும் நீ
ஒரு முத்ததோடே
நின்று விடு!
ஏனெனில்,
நான் அடுத்த நாளும்
ஏங்க வேண்டும்!
அந்த ஒற்றை
முத்தத்திற்கும்,
அந்த ச்ச்ச் என்ற
சத்தத்திற்கும்!
அப்பப்பா
அப்படி ஒரு ஆனந்தம்
எதிலும் கிடைத்ததில்லை
என் கண்ணம்மா!
🤍🤎💜❤️😘🥰😘❤️💜🤎🤍
✍️பாரதி
நீயும் நானும்
அடிக்கடி சண்டை
போட்டு கொள்வது
எதற்கு தெரியுமா?
என்னை விட்டு நீயும்
உன்னை விட்டு நானும்
பிரிந்து விட கூடாது
என்பதற்காக தான்!
அதை புரிந்து கொள்ள
முடியாமல் தான்!
நீயும் நானும் காதலே!
வேண்டாம் என்று
விலகி விடுகிறோம்!
💜🤍❤️💙💔💙❤️🤍💜
✍️பாரதி
பழகிய நாட்கள் எல்லாம்
இந்நாள் எடுத்து சொல்லுகிறது..!
உன்னால் உண்டான
நினைவெல்லாம் உணருகிறது..!
நம் நட்பின் ஆழம்
மட்டுமில்ல..!
நம் நட்பின் பிரிவையும்
புரிந்து கொள்ளும்..!
பிரிக்கிறோம் என்று கண்ணீர்த் துளி
சிந்திய கடைசி நாட்களை விட..!
மீண்டும் இணைந்து விடுவோமா
என்று எண்ணிய நாட்கள் அதிகம்..!
நீயும் நானும் பிரிந்து இருக்கும் தூரம்
மட்டும் தான் வெகுதொலைவு..!
நீயும் நானும் சேர்ந்து இருக்கும் தூரம்
என்பது நட்பின் சாலை வழி தான்..!
நம் நட்பு பிரிந்து விட்டுமோ
என்று எண்ணும் போதெல்லாம்..!
நம் நட்பிற்கு என்றுமே பிரிவே
என்று ஆறுதல் கூறும் நினைவுகள்
தான் நம் நட்பு...!
❤️🧡💛💚💙💜💙💚
ஆசான்..!
அறிவு கண் திறந்து..!
கனவு பாதை வகுத்து..!
கற்றாலும் கல்வியும்
மட்டும் கற்றுக் தராமல்..!
வாழ்க்கை கல்வி
கற்று கொடுத்து..!
வாழ்க்கை பாதை
அமைத்துக் தந்து..!
ஒவ்வொரு மாணவரின்
கனவிற்கும் இலட்சியத்திற்கும்..!
பின்னால் ஆசிரியர்
என்ற...
மாபெரும் துணை
உண்டு..!
மாபெரும் வெற்றி
உண்டு..!
#ஆசிரியர் தின வாழ்த்துகள்..!❤️
✍️பாரதி