காதல் மழை

மழைக்காலங்களில்
எனக்கு மழை மட்டும்
பிடிப்பதில்லை!

மழைக்கு முன் வரும்
வானவில் ரசிக்க
பிடிக்கும்!

மழைத்துளிகளை
கைகளில் பிடித்து
விளையாட பிடிக்கும்!

பிம்பங்களில்
விழுந்த மழைத்துளிகளில்
அவள் பெயர் எழுதி
ரசிக்க பிடிக்கும்!

மழையில் மழலையாக
துள்ளி விளையாட
பிடிக்கும்!

குளிர் மழையில்
கொஞ்சம் தேனீர்
அருந்துவதற்கு
பிடிக்கும்!

மழையில் கொஞ்சம்
பெரும் கவிதை
எழுத பிடிக்கும்!

இலை மேல்
விழுந்த மழைத்துளிகள்
தலை மேல்
விழுவது பிடிக்கும்!

மழைக்கு முன்
வீசும் மண்வாசனை
பிடிக்கும்!

மழைத்துளிகளின்
சங்கீதம் இசை கேட்க
பிடிக்கும்!

துளி துளியாய் சேர்ந்து
ஓடும் நதிகள் பிடிக்கும்!
தனி தனியாய் சேர்ந்து
இருக்கும் குட்டைகள்
பிடிக்கும்!

மழையில் குடை
பிடிக்க பிடிக்கும்!
மழைக்கு பயந்து
ஓட பிடிக்கும்!

மழை வந்தால்
வெயில் பிடிக்கும்!
மழைக்கு பின்
கிடைக்கும் அமைதி
பிடிக்கும்!
❤️💜😍☺️😍💜❤️

✍️பாரதி

எழுதியவர் : கவிஞர் பாரதி பிரபா (15-May-21, 7:30 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : kaadhal mazhai
பார்வை : 438

மேலே