நீ

தேன்மழை சாரலில் பூத்த பூங்கொத்து மலர் நீ..
வான்பார்த்து தேகம் சிலிர்க்கும் வண்ணமயில் நீ..
இருட்டு அறையில் வடிக்கப்பட்ட பொற்சிலை நீ..
கருவறையில் கால் அசைவில் கவிதை சொல்லும் கருப்பு வெள்ளை காகிதம் நீ...
என் கற்பனைக்கும் எட்டாத கடவுளின் ரகசியம் நீ..
என்னுள் வரையப்பட்ட குருதி வடிவ குழந்தை நீ...

எழுதியவர் : serlin (15-May-21, 11:06 pm)
சேர்த்தது : Nithys
Tanglish : nee
பார்வை : 82

மேலே