நட்பு
பழகிய நாட்கள் எல்லாம்
இந்நாள் எடுத்து சொல்லுகிறது..!
உன்னால் உண்டான
நினைவெல்லாம் உணருகிறது..!
நம் நட்பின் ஆழம்
மட்டுமில்ல..!
நம் நட்பின் பிரிவையும்
புரிந்து கொள்ளும்..!
பிரிக்கிறோம் என்று கண்ணீர்த் துளி
சிந்திய கடைசி நாட்களை விட..!
மீண்டும் இணைந்து விடுவோமா
என்று எண்ணிய நாட்கள் அதிகம்..!
நீயும் நானும் பிரிந்து இருக்கும் தூரம்
மட்டும் தான் வெகுதொலைவு..!
நீயும் நானும் சேர்ந்து இருக்கும் தூரம்
என்பது நட்பின் சாலை வழி தான்..!
நம் நட்பு பிரிந்து விட்டுமோ
என்று எண்ணும் போதெல்லாம்..!
நம் நட்பிற்கு என்றுமே பிரிவே
என்று ஆறுதல் கூறும் நினைவுகள்
தான் நம் நட்பு...!
❤️🧡💛💚💙💜💙💚💛🧡❤️
✍️ பாரதி