மனவெளியில் தினம்நடந்து வரும் தேவதையே

குளிரோடையோ உன் விழிகள்
மலர் மேடையோ உன்னிதழ்கள்
கலையும்மேகம் உன் கூந்தலோ
கவிதைத் தமிழுக்கு நீசொந்தமோ !

சிலைஅசைந்த நிஜமோ நீ
சித்திரம்எழுதிய எழிலோ நீ
புத்தகம் ஏந்திநிற்கும் நூலகமோ நீ
புன்னகை படைக்கும் காவியமோ நீ !

விடியல்கதிர் மஞ்சள் அழகே
வீணைஇசையில் பேசும் தமிழே
மயங்கும்மாலையின் வளரும் நிலவே
மனவெளியில் தினம்நடந்து வரும் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-20, 9:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே