பார்த்தவுடன் பத்திக்கிச்சு
விட்டு விட்டு
பெய்த மழை
வின்னை விட்டு
வந்த மழை
மின்னல் வெட்டும்
மழைப்பொழுதில்
என் மனதை
தொட்டுவிட்டு
போனதேனோ?
கொஞ்சம் விட்டுவிட்டு
போனதேனோ?
அத்திகட்டி
ஆலங்கட்டி
அத்தனையும்
வெள்ளக்கட்டி
விட்டுவிட்டு
போனதேனோ?
என் மனதை
கொஞ்சம்
தொட்டுவிட்டு
போனதேனோ?
சாரக் காற்று
சாய்ந்தாட
ஜன்னல் கொஞ்சம்
அசைந்தாட
அந்த ஜன்னல் வழி
வீட்டுக்குள்ள
ஓரு துளி
வந்ததேனோ?
என் மனதை
தொட்டுவிட்டு
போனதேனோ?
அத்தி கட்டி
ஆலங்கட்டி
அத்தனையும்
அவ முத்தக்கட்டி
விட்டுவிட்டு
போனதேனோ?
என் மனதை
கொஞ்சம்
தொட்டுவிட்டு
போனதேனோ?
மூணாறு மலையோரம்
அவளை முழுநிலவாய்
பார்த்தேனே -பார்த்தவுடன்
பத்திக்கிச்சு -காதல்
ஒண்ணு.தொத்திக்கிச்சு...
விட்டு விட்டு பெய்தமழையே
எங்கே அவளை- மூடிவிட்டு
சென்றாயோ?என் மனதை
ஏங்கவிட்டு சென்றாயோ?
விட்டு விட்டு
பெய்த மழை
வின்னை விட்டு
வந்த மழை
மீண்டும் அவளை
கொஞ்சம் கூட்டி வந்து
சேர்ப்பாயோ?
என் மனக்குறையை
கொஞ்சம் தீர்த்துவிட்டு
போவாயோ?கொஞ்சம் போவாயோ?
வருவாயோ ?கொஞ்சம் வருவாயோ ?
என்னை கொஞ்ச வருவாயோ.