நினைவலையில் நீ

நிலவு தேவதை
உலவு வரும் வேளை
வாடையோ மலரின்பால்
மையல் கொண்டு தென்றலாய் வீச
கனவுலகில் நான்..!

இதழோரம் சிறுநகை பிறக்க
காரணம் தேடி
புறப்பட எத்தனிக்க
இதயம் சொல்லியது
நினைவலையில் சிலநொடிகள்
நீ நின்று சென்றாய் என்று ..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (9-Sep-20, 5:52 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 424

மேலே