அப்படி ஒரு ஆனந்தம்

ஒரு சிறு முத்தம்
போதுமடி ஒரு சில
மணித்துளி!

நான் அப்படியே
உறைந்து விடுவதற்கும்!
நான் இப்படியே
செத்துப் விடுவதற்கும்!

முத்தமா அது?
மொத்தமாய் விற்பனை
செய்யக் கூட
என் காதலுக்கு!

நீ எனக்கு ஒரு முத்தம்
கொடுத்தால்!
நான் உன்னிடம்
திரும்ப திரும்ப ஓராயிரம்
வாங்க தான் நினைப்பேன்!

எதற்கும் நீ
ஒரு முத்ததோடே
நின்று விடு!
ஏனெனில்,
நான் அடுத்த நாளும்
ஏங்க வேண்டும்!

அந்த ஒற்றை
முத்தத்திற்கும்,
அந்த ச்ச்ச் என்ற
சத்தத்திற்கும்!

அப்பப்பா
அப்படி ஒரு ஆனந்தம்
எதிலும் கிடைத்ததில்லை
என் கண்ணம்மா!
🤍🤎💜❤️😘🥰😘❤️💜🤎🤍

✍️பாரதி

எழுதியவர் : கவிஞர் பாரதி பிரபா (11-Apr-21, 11:13 am)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : apadi oru aanantham
பார்வை : 179

மேலே