மகனானத் தகப்பன்

தந்தை என்னும் சொல்லுக்கு தகப்பனாக
தலைமேல் ஏற்றி உயரம் காட்டி உயர்ந்த
உன்னத உறவு
நான் கானா உயரம்
நீ காண எண்ணி
மாறிய ஏணி
அனைக்க விரித்த கைகள்
உன்னை பறக்க வைக்க விரிந்ததென்று
உணர்த்தும் உயரம்
மறைந்த சூரியன்
ஒளியாய் நீ எழுவது கண்டு
எப்பொழுதும் நான் இருப்பதுண்டு
எழுத எழுத ஊற்றாய்
கொட்டும் வார்த்தைகள்
வற்றாமல் வடியாமல் தொடரும்
மகனான – தகப்பன்

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:45 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 37

மேலே