உணவருந்திய நேரம்
என்னதோர் சக்தி எனக்குள் தானே
உன்னுடன் நானும் வாழ்கின்றேனே
பாதை சொல்லி நானும்
கை கோர்த்து நாமும்
உதடு ஒட்டா சிரிப்பும்
ஊமையான நடப்பும்
உணவகத்தில் அமர்ந்து
உனையே அனுதினமும் நுகர்ந்து
குவலையில் நிரம்பி வழிந்து
நீர் ஊற்றுவது மறந்து
நான் கொஞ்சம் நகர்ந்து
உன் அருகில் இருந்து
வாசித்த உணவு பட்டியல்
உன் உணவை நானும்
என் உணவை நீயும்
ஆடர் செய்வோம் என்று
ஒரே உணவை இருவரும் கூர
அதிர்ந்த சர்வர் வேற எதுவும்
என கேட்க
சாப்பிட்டு சொல்ரோம் னா என நீயும் கூரி
உணவு வரும் வேளைவரை உணவான
நம் உரையாடல்
நல்லா சாப்பிட சொல்லி நான் உனைக் கேட்க
கேட்காமல் எந்தன் தட்டில் நீ பகிர்ந்த உணவயும்
நானே சாப்பிட்டு
நீர் பருகும் நேரம்
புரையேரி நான் தும்ம
தலையில் தட்டி தண்ணீர்தர
காணவில்லை
உன்னை
தொலைத்தேன் என்னை
உன் நினைவால் நான் புரையேறி
நிரம்பி வழிந்தது நீர்
கண்மனியே
என்னதோர் சக்தி எனக்குள் தானே
தன்னிலை மறந்து உன்னுடன் கலந்து
உண-வருந்திய-நேரம்

