அந்நியன் அல்லவே

வில்லை வளைத்து
மாலை சூடி
தன்னை மணக்க
ராமன் ஒருவன்
வருவான் என்று
வாசலில் கோலமிட்டு
ஜன்னல் கம்பியில்
முகம் புதைத்து
வழி மேல் விழி வைத்து
வைதேகி போல்
காத்திருந்தேன்....! !

கடைசியில்
குழல் ஊதும்
கண்ணன் வந்து
மாலையிட
ராதையாக மாறி
மறுப்பின்றி
ஏற்று கொண்டேன்
மணாளனாக..! !

ராமனும், கண்ணனும்
ஒருவர் தானே...!
அந்நியன் அல்லவே
அவதாரம் தானே
வேறு வேறுயென்ற
எண்ணத்தில்....! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Aug-20, 3:21 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 66

மேலே