நான் உன்னை திட்டி தீர்த்து விடுகிறேன் 555

என்னுயிரே...


முதல் நாள்
பேருந்து பயணம்...

முன் இருக்கையில் நானும்
பின் இருக்கையில் நீயும்...

அவ்வப்போது திரும்பி
பார்ப்பேன் நான் உன்னை...

சில நேரம் நீயும்
பார்ப்பாய் என்னை...

தினம் தொடர்ந்த
பேருந்து பயணம்...

கல்லூரி பேருந்து
நம் காதல் பேருந்தானது...

கல்லூரியில் வெவ்வேறு
பிரிவு என்றாலும்...

நம்மை அழைத்து செல்லும்
பேருந்து ஒன்றுதான்...

உடலால் நீ வேறு நான் வேறு
என்று இருந்தாலும்...

உள்ளதால்
நாம் ஒன்றுதான்...

என்
உள்ளம் கவர்ந்தவளே...

கைபேசியில் சொல்கிறாய் நாம்
விலகிட இது தருணம் என்று...

துடிதுடிக்கும் என்
உள்ளத்தை நீ உணர்வாயா...

உன் விருப்பம் போல்
உன் வாழ்வை வாழ்ந்துபார்...

ஒருமுறை என்னெதிரில்
வா முடிந்தால்...

நான் உன்னை
திட்டி தீர்த்து விடுகிறேன்...

அப்போதாவது நீ என்
மனதில் இருந்து செல்வாய்...

என்னை நான்
தேற்றி கொள்கிறேன்...

வந்து செல் என்முன்னே
நம் இறுதி சந்திப்பாக.....



முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Sep-20, 6:23 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 444

மேலே