வாழ்க்கை வாழ்வதற்கே

உந்தன் சிதறிக்கிடக்கும் மனதை
ஒருபோதும் சேர்த்துவைத்து தைக்க நினைக்காதே...!

நீ தைக்க தைக்க அதன் வடுக்கள் ஆறாமல்
இருந்துகொண்டுதான்
இருக்கும்...!

மக்கிய நிகழ்வுகளையும்,
அழுகியநிலையில் நீங்காமல்
இருக்கும் சில கசப்பான நினைவுகளையும்
வேரோடு வெட்டி எறி...!

அது புதிதாய் வளரட்டும்...!

உன்னை அவமானாம்படுத்திய தருணங்களை
ஒருபோதும் மறக்காதே
அவை தான் உந்தன்
உயர்வுக்கு காரணமாய் அமையும்
உன்னை மென் மேலும் உயர்த்தும்...!

உன்னை ஏளனமாய் பார்த்து கைகொட்டி
சிரித்தவர்களின் இதழ்களெல்லாம்
சிரிக்க மறந்துவிடும்
உந்தன் வளர்ச்சி கண்டு...

நீ கண்ணாடி பொருள் அல்ல
விழுந்தால் உடைய
உயிருள்ள மனிதன் என்பதை நினைவில்கொள்
எத்தனை முறை விழுந்தாலும்
விழுந்த இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும்
எழுச்சிபெறு...
நம் வாழ்க்கை வாழ்வதற்கே...!

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 1:12 pm)
சேர்த்தது : Sivasankari
பார்வை : 355

மேலே