காதல் கிறுக்கன்
மல்லிகைப்பூச்சரமே மல்லிகைப்பூச்சரமே
சொல்ல என்ன இருக்கு வாசமும் பரப்பி
அவள் கார்க்கூந்தலில் நித்தம் உன் வாசம்
கூந்தலை அணைக்கின்றாய் அவளையும்
என்னைப்பார், நித்தம் அவள் பின்னே
அலையும் நான் இன்றுவரை அவள்
நிலைக்கூட தொட்டுவிட முடியாமல் ...
வளையலே, தங்க வளையலே அவள்
பளபளக்கும் சிவந்த கைகளில் அணைத்தும்
அணைக்காமலும் இருக்கின்றாய் எழிலாய்
என்னைப்பார் அவள் கைவிரலில் நகம்கூட
அண்ட முடியாது நான்....
அவள் அழகு கணுக்கால்களில் அணியாய்
கொஞ்சும் சலங்கையுமாய் வாசம் செய்யும்
வெள்ளி சலங்கையே நித்தம் அவள்
காலில் உன் வாசம கிண் கிணி ஓசை எழுப்பி
என்னைப்பார் அவளுக்காக அவள் பார்வைக்காக
ஏங்கும் காதல் கிறுக்கன் அவள்
கடைக்கண் பார்வை ஒருநாள் கிட்டுமென
இன்னும் அவள் பின்னால் .......

