பொய் பேச வாங்க

ஒரு மிகக் குறைந்த அளவு தொண்டர்களைக் கொண்ட கட்சியின் அறிவிப்பு:
அன்புத் தமிழ் மக்களே எங்கள் கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. அதன் வளர்ச்சிக்கு தகுந்த இணையப் பிரச்சாரம் தேவை. ஆர்வம் உள்ளவர்கள் எங்கள் தலைமை அலுவலகத்துக்கு வருகிற புதன்கிழமை 07-010-2020 அன்று தாலை 09.30க்கும் தேர்வில் கலந்து கொள்ளவும். மற்றவை தேர்விற்கு முன்னதாக அறிவிக்கப்படும்:
@@@@
07-÷10-2020 கட்சி தலைமை அலுவலகம். கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் அறிவிக்கிறார்::
அன்பு நண்பர்களே,
எங்கள் கட்சி வளர்ச்சி அடைய அதிக அளவில் இணையப் பிரச்சாரம் தேவை..பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை நம் கட்சிக்கு இழுக்கவேண்டும். நம் எதிரிக் கட்சிகள் பற்றி போலி ஆதாரம் தயாரித்து யூட்யூப்பில் பதிவிட வேண்டும்.ஒரு போலி ஆதார யூட்டூய்ப் பதிவுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். மக்கள் நம்பும்படியான பொய்த் தகவல் ஒன்றைப் பரப்பினால் பரப்பினால் ஆயிரம் ரூபாய் பரிசு. நகைச்சுவையுடன் கூடிய மீம்ஸ்ஸை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டால் ரூபாய் ஐயாயிரம் பரிசு. பரிசுப் பணம் அனைத்தும் உங்கள் வங்கிக் கணக்கில் உடனே ஏற்றப்படும். தவறாமல் தேர்வுத் தாளில் குறிப்பிட்ட இடத்தில் உங்களைப் பற்றிய விவரம் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை எழுதிவிட்டு கேள்விதளுக்குப் பதில் எழுதுங்கள். நீங்கள் எழுதும்
எதிர் கட்சிகள் பற்றி எழுதும் பொய்களின் தரத்திற்கு ஏற்ப பரிசுப் பணம் இன்று மட்டும் உடனே வழங்கப்படும். கால அளவு மூன்று மணி நேரம். வாழ்த்துக்கள். எழுத ஆரம்பியுங்கள்.

எழுதியவர் : மலர் (3-Oct-20, 11:43 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : poy PESA vaanga
பார்வை : 157

மேலே