பெயிண்ட் அடிக்கிற வேலை

தொண்டர்கள் மிகக் குறைவாக உள்ள ஒரு கட்சியின் தலைமை நிலையச் சுற்றிக்கை:

எனதருமை கட்சித் தொண்டர்களே, நம் கட்சியை வளர்க்க வேண்டுமென்றால் நாம் நமது எதிர்கட்சிகளைச் சீண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஊடகங்களில் நமக்கு இலவசமாக விளம்பரம் கிடைக்கும்.

மாநிலமெங்கும் நம் கட்சியைப் பற்றிய எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
வேலை வெட்டி இல்லாத நம் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்த ஊதியத்துடன் கூடிய ஒரு பணி:
நம் கொள்கைகளுக்கு எதிரான கட்சிகள்/அமைப்புகள் நிறுவிய சிலைகளுக்கு பெயிண்ட் அடிப்பவருக்கு ரூ. 5,000/- பரிசு.

செருப்பு மாலையை சிலைக்கு மாட்டிவிடுபவர்களுக்குப் பரிசு ரூ. 10,000/-

துடைப்ப மாலையைச் சிலைக்கு மாட்டிவிடும் பெண்களுக்கு அவர்கள் தொண்டையும் வீரத்தையும் பாராட்டி ரூ. 15,000/- பரிசாக வழங்கப்படும்.

இது வேறு எந்த நாட்டிலும் நடக்காத நிகழ்வு என்பதால் உலகில் உள்ள பிரபல ஊடகங்கள் அனைத்தும் நமது புதுமையான போராட்டம் பற்றிய செய்திகளை வெளியிடுவார்கள். இது நம் கட்சி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். தயாராகுங்கள்.

எழுதியவர் : மலர் (4-Oct-20, 11:12 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 110

மேலே