உள்ளக் கண்ணன்

#உள்ளக் கண்ணன்# கவிதை
தேவகியின் மைந்தனாய் பிறந்து
யசோதை புத்திரனாய் திரிந்த
கண்ணனே மணி வண்னனே
கருணையுடன் நீ வருவாயென
கன்னி நானும் காத்திருக்கேன்.
குன்றுதன்னை குடையாக்கி
வருணனையே தோற்கடித்து
ஆயரைதான் காத்த கண்ணா
ஆநிரைகள் மேய்க்கும் கண்ணா.
பார்த்தனுக்கு சாரதியானாய்
பாருக்கே கீதை சொன்னாய் உன்
பவழமுகம் தன்னை காண
கரையோரம் காத்திருக்கேன்.
கோபியர் தம்மையே கொஞ்சி
கோபங்கள் தீர்க்கும் கண்ணா
கோபாலகிருஷ்ணா, நீ, குழலூதி
குறை தீர்க்க வரும் நாளை
எண்ணியே காத்திருக்கேன்.
தீராத விளையாட்டு பிள்ளையாய்
கோகுலத்தில் கோலோச்சி
மண்ணைத் தின்று யசோதைக்கு
மாபெரும் உலகை காட்டி
அண்ட உலகமும் உன்னுள்
அடக்கமென சொன்னவனே
கார்மேக குழலி நானும்
உனக்காக காத்திருக்கேன்.
காத்திருந்த காலமெல்லாம்
போதுமென்று நீ நினைத்து
கடிவாளம் தனை அறுத்து
என்னில் உன்னை பார்த்திடவே
ஏகாந்தம் அருளி விட்டாய்.
கோபாலா கோவிந்தா கோகுல
கிருஷ்ணா உன் சரணம்.

எழுதியவர் : கௌரி கோபாலகிருஷ்ணன் (6-Oct-20, 3:11 pm)
Tanglish : ullak Kannan
பார்வை : 61

மேலே