அம்மா

ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!

எழுதியவர் : ஜனனிசிவலிங்கம் (13-Oct-20, 2:37 pm)
சேர்த்தது : janani
Tanglish : amma
பார்வை : 327

மேலே