அவள் கண்கள்

அவள் முகத்தையே உற்று பார்த்தேன்
அப்படி என்னதான் அதில் காண்கின்றாய்
என்று கேட்டான் என்நண்பன் அதற்கு
நான் சொன்னேன்...' நண்பா இத்தனை நாள்
காதலைப் பற்றி கவிஞர்கள் எழுதும் வரிகள்
அத்தனையும் பொய்யே பொய்யே என்று;
ஆனால் அதோ பார் அவள் கண்கள்... அவை
அவள் முகத்தில் துள்ளும் கயலாய் அல்லவோ
தெரிகிறது.... முகத்தில் மீனாட்டமா இது
அப்பப்பா எத்தனை அழகு நண்பா அவள் கண்கள்'
அவள் கன்னடம் மீனாட்டம் என்மனது
அதைக் கண்டு ஆட்டம் ...
இதைக் கேட்டு அவள் கண்களை பார்த்த
என் நண்பனும் அவள் கண்ணழகில்
தத்துவம் கண்டான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Oct-20, 2:08 pm)
Tanglish : aval kangal
பார்வை : 219

மேலே