ஆளுக்கொரு கட்சில இருக்கணும்

டேய் பேரப்பசங்களா இங்க வாங்கடா. நமக்கு வசதில எந்தக் கொறையும் இல்ல. ஊருப்பட்ட சொத்து இருக்குது. ஆளுக்கொரு தொழிற்சாலை. நாம எல்லாம் கூட்டுக் குடும்பமா வாழந்துட்டு இருக்கிறோம். ஒரே ஒரு கொறை தான் நமக்கு.
@@@@@@
என்ன கொறையுங்க தாத்தா?
@@@@@@@
அரசியலை விட்டு விலகி இருக்கிறோம். அதுதான் பெரிய கொறை. நான் பல ஊர்களல பாக்கிறேன். அப்பன் ஒரு கட்சில இருப்பான். மகள் ஒரு கட்சில மகன் ஒரு கட்சில இருப்பாங்க.வசதியான குடும்பத்தில ரண்டு பையன்கள் இருந்தா அண்ணன் எதிர் கட்சில இருந்தா தம்பி ஆளுங்கட்சில இருப்பான்.
@@@##@@@
எதுக்கு தாத்தா அது மாதிரி ஆளுக்கு ஒரு கட்சில இருக்கிறாங்க? கொள்கை அடிப்படையிலா?
@@@###
கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது. சொத்தைப் பாதுகாக்கவும் அதைப் பல மடங்கு பெருக்கவும் அரசியல்வாதிகளின் ஆதரவு தேவை.ரவுடிங்க தொல்லையிலிருந்து தப்பிக்கவும் கட்சி உதவும். அதுக்குத்தான் ஆளுக்கொரு கட்சி.
@@@@@@@
சரி நீங்களே சொல்லுங்க தாத்தா. நாங்க எந்தெந்த கட்சில சேரணும். உறுப்பினர் எண்ணிக்கை கொறைவா இருக்கிற கட்சிக்குப் போனா உடனே ஏதாவது பெரிய பதவியாத் தர்றாங்களாம்.
@@@@#@@
டேய்ப் பேரப்பசங்களா, நீங்க நாலு பேருமே பெரிய தொழில் அதிபர்கள். தேசியக் கட்சிங்க ரண்டிலும் ரவியும்
ராசசேகரும் சேரட்டும். கார்த்தியும் கணேசும் மாநிலத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிங்கள்ல சேரட்டும். நாலு பேரும் நீங்க சேரப்போற கட்சித் தலைவருக்கு இன்னிக்கு தெரிவிச்சிட்டீங்கனா நல்லது.
@@@@|@@
எதுக்கு தாத்தா?
@@@@@@@
அப்பத்தான்டா பசங்களா அந்தந்த தலைவர்கள் நிருபர் கூட்டத்தில நீங்க அவுங்க கட்சிங்கள்ல சேரப்போறதை அறிவிப்பாங்க. நாளைக்கு தொலைக்காட்சி செய்தில இந்தத் தகவலைச் சொல்லுவாங்க. நாளிதழ்ல எல்லாம் செய்தி போடுவாங்க.
@@@@@@@@
சரிங்க தாத்தா. நாங்க அப்படியே செய்யறோம். நாளைக்கு காலைல நம்ம மாளிகையின் மேல நாலு மூலையிலும் நாலு கட்சிக் கொடிகளும் பட்டொளி வீசிப்பறக்கும்.

எழுதியவர் : மலர் (18-Oct-20, 5:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 108

மேலே