கரைந்த கீதம்


நிலா! நிலா! நீயல்லவா
எப்போதும் பாடும் வெண்ணிலா
உலா! உலா! நீ போனதால்
உயிர் போனதெங்கள் கண்ணிலா


என் காயம் தீரப் பாடினாய்
உன் பாடல் கீதமே
பல்லாண்டுகள் வாழ்ந்திடும்
உன் பாடல் வேதமே
உன் தாளமென்னும் நாதத்தால்
என் சோகம் போனதே
சொல்லாமலே மண்னோடுதான்
உன் ஜீவன் போனதேன்?
புண்ணானது நெஞ்சல்லவோ
ரணம் என்று ஆறுமோ?

அந்த ஆறுபோல ஓடியே
உன் பாடல் தாவுமே
உடலெங்குமே உயிர்போலவே
உன் ராகம் மேவுமே
அந்த வானம் வாழும் காலமும்
உன் கானம் வாழுமே
இதயங்களை இசையோடுதான்
அந்த ஞானம் ஆளுமே
உன் தேகமே சங்கீதமாய்
இன்று மாறிப்போனதோ!

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (18-Oct-20, 8:41 pm)
Tanglish : karainth keetham
பார்வை : 476

மேலே