நூல்வேலி

அவன் நந்தா; பார்க்க பார்க்க பிடிக்கும் என்கிற ரகம் இல்லை; கொஞ்சம் பழக பழக பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்; வாங்க அவன் எப்படி என நாமும் பார்க்கலாம்; என்கூடவே வாங்க;
நந்தா படுத்து தூங்க முயன்று கொண்டிருந்தான்; தூக்கமே வரவில்லை; இன்று அவனும் அவன் நண்பனும் பார்க்கில் பார்த்த ஒரு பெண்ணை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்; அவன் நண்பன் வாசு; வாசுவுக்கும் நந்தாவுக்கும் வேலையே பெண்களை சைட் அடிப்பது தான்; சில நேரத்தில் இல்லை இல்லை பல நேரங்களில் வயது வித்தியாசமும் பார்ப்பதில்லை; இவர்களுக்கு ஏன் இந்த புத்தி? ஏனென்றால் இவர்கள் இந்த ஜெனரேஷன் இளைஞர்கள்; இன்றைய இளைஞர்களில் நூற்றுக்கு 60 பேர் இப்படி வாழ்வது தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; மற்ற பெண்களைப் பற்றி தவறாக நினைப்பது; மற்ற பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் தருணத்தை எதிர்பார்ப்பது; அவர்களை கிண்டலடிப்பது; இன்னும் எத்தனையோ? இதற்கு இன்றைய டெக்னாலஜி விஞ்ஞானமும் காரணம்; இவர்கள் செய்யும் தவறான செயல்களால் விஞ்ஞானத்துக்கு இல்லை இல்லை இவர்களின் அஞ்ஞான செயல்களால் விஞ்ஞானத்துக்கும் கெட்ட பெயர்;
என்ன செய்வது? விஞ்ஞானத்தால் வானம் தொட்ட அப்துல் கலாம் வாழ்ந்த நாடு தான் இது; இன்றைய இதன் சாபக்கேடு தீயவர்களின் கைகளில் விஞ்ஞானம் படும்பாடு; காசை மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக கொண்ட மனிதர்கள் என்ற போர்வையில் அடியாட்கள் கொண்ட அரசியல் நடத்தும் தலைவர்கள் வாழும் நாட்டில் பிறந்ததும் ஒரு தவறு; இந்த நாளில் வாழ்வதும் ஒரு காரணம்; இல்லையென்றால் தவறான வெப்சைட்களை தடை செய்யாமல் யாரெல்லாம் தவறு செய்கிறார்கள் என்று கணக்கு பார்க்கும் நாட்டில் இவர்கள் பிறப்பார்களா ?; இன்றைய இளைஞர்களை மட்டும் தவறு சொல்ல முடியாது;
நந்தா, தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான்;
-----------------------------------------------
அலாரம் அடித்தது; அலாரத்தை அலாரத்தை நிறுத்தி வேகமாக எழுந்தான் நந்தா; வேகமாக அவனால் எழ முடியவில்லை; வயதின் காரணமாக இப்போதெல்லாம் அவனுக்கு தள்ளாமை வந்துவிடுகிறது; இன்று முக்கியமான நாள் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தன் மகன் அவினாஷ்க்கு பெண்பார்க்க புறப்பட வேண்டும்; அவினாஷ் நல்ல வேலையில் இருக்கிறான்; கடந்த ஒரு வருடமாக அவன் மனைவி, மகனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்; சரி சரி பார்த்து விடலாம் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கிறவன்;
இன்று தான் புறப்படுகிறான்; இந்த வேலை முடிந்துவிடும்; துணைக்கு வாசுவையும் அழைத்திருந்தான்; பெண் பார்ப்பது தானே; பிடித்து இருந்தால் முடிக்கப் போகிறோம்; நிச்சயம் சீக்கிரம் முடிந்து விடும் என்று நம்பிக்கையோடு இருந்தான்; நம்பிக்கைதானே வாழ்க்கை;
எல்லோருமாக கிளம்பி – நந்தா, மகன் அவினாஷ், மனைவி மற்றும் வாசுவும் அவன் மனைவியும் என ஐந்து பேராக சென்றார்கள்; பக்கத்தில் ஏதோ ஒரு ஊர் என்று இரண்டு மணி நேரம் பயணம் செய்து சென்றார்கள்; வண்டியை விட்டு இறங்கிய உடன் அங்கு இருந்த ஒரு வீட்டு விலாசம் விசாரித்து பெண் வீடு சென்று சேர்ந்தார்கள்; பெண்ணை பார்த்தார்கள் மகனுக்கு பெண்ணை ரொம்ப பிடித்தது; அப்பொழுதுதான் நந்தா பெண்ணின் தாயார் முகத்தைப் பார்த்தான்; அவனுக்கு தனது இளமை வயதில் தான் சுற்றி வந்த பார்வதி நியாபகம் வந்தது; ஆம்; அதே பார்வதி தான் ;அதே பார்வதி தான் என்ன செய்வது? என்று தெரியாமல் அவன் விழிக்க பக்கத்திலிருந்த வாசுவும் திருட்டு முழி முழித்தான்;
கொஞ்ச நேரத்தில் சிடுசிடுவென பேசிவிட்டு எதையோ பேசி தட்டிக்கழித்து ஒருவழியாக மகனையும் மனைவியையும் கூட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்; அவன் மனதுக்குள் ஒரே போராட்டம்; இப்படி ஆயிடுச்சு என்று வாசுவிடம் ரகசியமாக பேசினான்; நல்ல வேலை பார்வதிக்கு நம்மை அடையாளம் தெரியல என்று வாசு சொல்லி சிரித்தான்; தெரிந்திருந்ததா.. உன் நிலைமை அசிங்கமாய் இருக்கும்; சரி சரி இதையே யோசிக்காத; மத்த வேலையை பாரு; அடுத்த இடம் கண்டிப்பா நல்லா அமையும் என ஆறுதல் கூறி சென்றான் ஆத்ம நண்பன்; சென்று விட்டான்;
மகன் அவினாஷ்க்கோ அப்பாவிடம் என்ன கேட்பது? எப்படி கேட்பது? என தெரியாமல் மௌனமாக இருந்தான்; அப்போது அப்பா தனிமையில் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது பார்த்து….
அவினாஷ், “ஏம்பா பொண்ணு பிடிக்கல? ஒன்றுமே கேட்காமல் வந்துட்டீங்க; என்ன ஆச்சு? உங்களுக்கு?”, கேள்விக்கணைகளை தொடுத்தான்;
மனைவிக்கு மிகவும் கோபம்; சிடுசிடுவென இருந்தாள்;
மனைவி, “பொண்ணு லட்சணமா இருந்துச்சு; என்ன? சரியில்லன்னு வந்துட்டீங்க?”.
நந்தா, “நீ வேற; வீடு சரியில்லை; அவங்க வசிக்கிற இடம் சரி இல்லை; இதைவிட நல்ல இடமாக பையனுக்கு பார்க்கலாம் என சமாளித்தான்;
ஒரு மாதம் சென்றது; மீண்டும் பெண் பார்க்கும் படலம்; இந்த முறை நிச்சயம் பெண் பிடித்துவிடும் என்று நம்பிக்கையோடு அதே 5 பேர் புறப்பட்டார்கள்; அப்பாவிடம் அவினாஷ் பெண்ணின் புகைப்படத்தை காட்டி அப்பா, நல்லா பாருங்க அங்க வந்து இது சரி இல்ல அது சரி இல்லன்னு பொண்ணு பிடிக்கல அப்படின்னு சொல்லக்கூடாது; நல்ல வசதியான இடம்; அதனால கவனமா பேசணும் என்று பல கண்டிஷன் போட்ட பிறகுதான் அவினாஷ் பெண் பார்க்கும் படலத்திற்கு சம்மதித்தான் எல்லாவற்றுக்கும் தலையாட்டினான் நந்தா.
இந்த முறை பெண்ணையும் பெண்ணின் பெற்றோரையும் எல்லோருக்கும் பிடித்தது நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்; அப்போது திடீரென ஒரு பெண் உள்ளே நுழைந்தார்; அவர் சரளா; என் தங்கை சரளா என பெண்ணின் தாயார் அறிமுகப்படுத்தினார்; மீண்டும் நந்தாவுக்கும் வாசுவுக்கும் அடி வயிறு கலங்கியது; ஏன்னா? அந்த சரளா இவர்களால் கல்லூரியில் டீஸ் பண்ண பட்டவள்; சரளாவின் பின்னாடியே வாசுவும் நந்தாவும் திரிந்திருந்தார்கள்;அவர்களை பார்த்ததும் சரளாவுக்கும் நினைவு வந்துவிட்டது; சரளா, “வணக்கம்; உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் வருது”;
நந்தா, “அப்படி ஒன்னும் தெரியலையே அதெல்லாம் இருக்காது; நீங்கள் பார்த்திருக்க முடியாது பேச்சு வளர வளர நந்தாவுக்கு பயம் அதிகமாகியது; நிச்சயம் ஊருக்கு போயி சொல்றோம் என்ன கிளம்பி விட்டான்;
(அப்போது எங்கோ பாடல் ஒலித்தது சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க😉; முதல்முறையாக நந்தாவுக்கு வலித்தது; ஆண் என்ற அலட்சிய ஆணவத்தில் இருந்து முதன்முறையாக தலை குனிந்தான்;

(அவினாஷ்க்கு மிகுந்த ஏமாற்றம்; நந்தாவால் அவினாஷ் முகத்தை பார்க்க முடியவில்லை; மனைவியிடமும் எதுவும் சொல்ல முடியவில்லை; )
ஆத்ம நண்பன் வாசு அனைத்து தீய பழக்கத்துக்கும் துணை வந்தவன் இப்போது பேசினான்;
வாசு, “டேய் நந்தா முன்வினை பின்தொடரும் என்று சொல்லுவாங்க; அது உன் விஷயத்துல சரியாதான் போச்சு; இனி பெண் பாக்கறதுக்கு என்ன கூப்பிடாத; என் மனைவி, ஏன் உங்க நண்பருக்கு என்ன ஆச்சு ஒரு மாதிரி நடந்துக்கிறாரு அப்படின்னு கேள்வி கேட்கிறாள்; என்னால பதில் சொல்ல முடியல;”
நந்தா, “என்னவோ தெரியல எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது? எங்க பார்த்தாலும் நாம பார்த்த பொண்ணுங்களாகவே இருக்காங்க; அப்படின்னா நம்ம சின்ன வயசுல தருதலையா சுத்தி இருக்கோம்; இத்தனை கேவலமாக வந்திருக்கோம்? இல்லையாடா? பொண்ணுங்க பின்னாடி சுத்துற வேலைய பார்த்திருக்குமா; பொண்ணுங்கள மதிக்காததனால இன்னைக்கு எனக்கு இப்படி நடக்குதடா? புலம்பினான்; இவன் புலம்பலை கண்டு வாசுவுக்கும் பயமாக தான் இருந்தது; அவனுக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கே; அதுக்கு மாப்பிள்ளை தேடனுமே ?
நந்தா, தொடர்ந்தான் ... “அவினாஷ் நம்மள மாதிரி இல்ல; அவன் நல்லவன் ரொம்ப நல்லவன்டா; என் பையனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை என்னால் அமைத்துக் கொடுக்க முடியாதா? நானெல்லாம் ஒரு அப்பனா?ஏன் எனக்கு இத்தனை கஷ்டம்; இன்னைக்கு நெனச்சா அசிங்கமா தாண்டா இருக்கு;
நந்தா அறையை விட்டு வெளியே வருவதில்லை; மனைவி மகள் மகன் யார் முகத்தையும் பார்க்க முடியவில்லை; என்ன செய்றது?
அப்போது அவினாஷ் அங்கு வந்தான்; அப்பா எனக்கு கல்யாணம் வேண்டாம் இனி எனக்காக பொண்ணு பாக்க போக வேண்டாம்; சொல்லிவிட்டு ஆபீஸ்க்கு சென்றுவிட்டான்; நந்தாவுக்கு தலைசுற்றியது; இல்ல; இல்ல உங்க யார் மேலயும் தப்பு இல்ல; என் மேல தான் தப்பு நான் என்ன செய்யறது?

நந்தா வாசுவை தேடிச்சென்று புலம்பினான்;

நந்தா, “வாசு, என்ன மட்டும் குத்தம் சொல்லாதே; நீயும் இப்படி தான் இருந்தே; ஆனா இப்ப பிரச்சனை எனக்கு அதனால குத்தி காட்டுறே; சரி விடு இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறேன்”;
(வீடு மயான அமைதியானது; என் மனைவியும், மகனும் என்னுடன் பேசுவதில்லை; என் பிரச்சனையை எப்படி அவங்களுக்கு சொல்றதுன்னு எனக்கும் புரியல; என்ன நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு;
அவினாஷ் என்ன மாதிரி இல்ல; ரொம்ப நல்ல பையன்; பொறுப்பானவன்; பெண்களை மதிப்பவன்; அவனுக்கு போய் இப்படி நடக்குது; இனி அவனுக்கு பெண் பாக்குற வேலையே வேண்டாம்; அவனையே நல்ல பொண்ணா பார்த்து விரும்பி கல்யாணம் பண்ணிக்க சொல்லலாம்; அப்படி இல்லையா ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணா பார்க்கச் செல்லலாம்;
எனக்கே என்ன நெனச்ச அருவருப்பா இருக்கு; என்னோட மகனுக்கு ஒரு நல்ல தந்தையா என்னால இருக்க முடியல;
என் குழந்தைக்கு நல்ல தந்தைதான் தான் நான்; ஆமா நல்ல தந்தைதான்; நிச்சயமா நல்லவன்தான் நான்;
என்று தூக்கத்தில் கத்திக்கொண்டு இருந்தவனை அவனது தாத்தா பார்த்தார்;
தாத்தா பரந்தாமன்; பெயருக்கேற்ற நல்ல பரந்த மனம் படைத்தவர்; நல்ல ஒழுக்கமும் நல்ல சிந்தனைகளும் உடையவர்;
தாத்தா பரந்தாமன், “நம்ம வாழ்க்கை என்கிறது ஒரு தொடர்ந்த பயணம்; இன்னிக்கு நாம் செய்கிற செயல்கள் தான் நாளைய நமது வாழ்வை நிர்ணயம் பண்ணுது; நல்லா இழுத்துப் போர்த்திக்கொண்டு ஒன்பது மணி வரைக்கும் தூங்கினா வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும்? நல்ல நண்பர்களோடு சேரனும்; நல்ல பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளனும்; என்பது எல்லாம் கிடையாது; எப்ப பாரு கண்ட நேரத்துக்கு வருவது; கண்ட நேரத்தில் தூங்குவது; நல்ல சிந்தனைகள் இல்லாதது அப்புறம் எப்படி நமக்கு நல்லது நடக்கும்; டேய் நந்தா! எந்திரி; வெளிச்சம் வந்துருச்சு பாரு; எழுந்திரு”;

நந்தா அலறிக்கொண்டு எழுந்தான்; படுக்கையிலிருந்து விழுந்தான், எழுந்தான்;
தாத்தா, “என்னடா? என்னடா ஆச்சு? கெட்ட கனவு கண்டியா? இப்படி வேர்க்குது நந்தா தாத்தாவை பார்த்தவுடன் கட்டிக்கொண்டான்;
நந்தா, “தாத்தா கனவு கெட்ட கனவு தான்;
தாத்தா, "சொல்லுடா; என்ன கனவு ? இப்படி பயப்படுற? "
நந்தா,"தாத்தா கனவை சொன்னால் வெட்கமா இருக்கு ";
தாத்தா, "உன் மூஞ்சை பார்த்தா பயப்படுற மாதிரி இல்ல இருக்கு ";
நந்தா," ஆமாம் தாத்தா ";
தாத்தா, " எங்க காலத்துல காந்தி சொல்லிருக்கார் - நாம் வெளியில் சொல்ல தயங்கும் ஒவ்வொரு எண்ணமும் செயல்களும் தவறானவைகள் தான் என்று;"
நந்தா, “ஆரம்பிச்சிட்டியா தாத்தா”;
தாத்தா, “ஏன் ? உங்க காலத்துல அப்துல் கலாம் கூட சொல்லிருக்கார் உன்னை தூங்க விடாது செய்வது தான் நல்ல கனவு என்று "; ஆனால் நீ கனவை பார்த்து பயப்படறயே ?"
நந்தா," சாரி தாத்தா ;"
தாத்தா, " டேய், நந்தா உங்க அப்பாவை பாரு, தன் மனைவி இறந்த பின் வேறு எண்ணமே இல்லாமல் உனக்காகவும் உன் தங்கைக்காகவும் மாடாக உழைக்கிறான்; நீ என்னடான்னா ? எருமை மாடு மாதிரி இல்லை இல்லை அது கூட அது சாப்பாட்டுக்கு உழைக்குது ...";
நந்தா, " தாத்தா என்ன ரொம்ப வாராதே; என் கனவை நான் யாரிடமாவது சொல்லி அழணும்; அப்போ தான் நான் செய்வது தப்புன்னு எனக்கே புரியும். எனக்கு யாரிடமாவது சொல்லணும் ...நீயே கேளு தாத்தா ; (என சொல்ல தொடங்கினான்);
அவன் முடித்த போது தாத்தா வுக்கு சிரிப்பு வரவில்லை ; தீவிரமான சிந்தனை தான் வந்தது;
பேராண்டி, "பெண்களை நம் கண்களாக பார்த்த காலத்தில் இருந்தவர்கள் நாங்கள்;
மனைவியை தவிர பிற பெண்களை கண்ணியமாக பார்த்த தலைமுறை எங்களுது;"
(நந்தா அவரின் பேச்சை கவனமாக கவனித்தான் முதல் முறையாக ; நந்தா என கூப்பிட்டு கொண்டே வீட்டு வாசலுக்கு வந்த வாசுவும் அவரின் பேச்சை கவனிக்கலானான்; )
தாத்தா, “எப்போதும் நீங்க சொல்லுவீங்களே இந்த காலத்து பசங்க, தாத்தா… உங்க தலைமுறையினர் திருமணம் 10 , 12 வயதிலேயே நடந்தது; உங்களுக்கு கூடவே ஒரு பொண்ணு இருந்ததனால் வேற பெண்களை தேட அவசியம் இல்லைன்னு;”
அன்று அது ஒரு சிஸ்டம் ; அது மட்டுமல்ல; ஒரு பெண் தன் வீட்டிலேயே வளர்ந்து இருபது வயதில் பிறர் வீட்டுக்கு சென்றால் அது அந்த பெண்ணின் மன நலனை பாதிக்கும்; அவளுக்கு எல்லோரிடமும் பழக தெரியாது; புது இடம் ; மனிதர்கள் , எண்ணங்கள் என எல்லாமே சிக்கல்கள் தான் வரும்; அதனால் தான் தன் வீடு என்ற மன சிந்தனையை சிறுவயது திருமணத்தில் கொடுத்தார்கள் ;
இந்த சிஸ்டம் கெட்டவர்கள் கைகளில் சென்ற போது கெட்டதானது; இப்போது இந்த இன்டர்நெட் உங்க கைகளில் தப்பாகுது பாரு அது போல;” என்று எங்களை பார்த்தார்; மேலும் தொடர்ந்தார்;
ஆமாம்; நாங்கள் நல்ல துணையாக வாழத்தான் ; அப்போதும் எங்க மனைவி உடைய குடும்பத்தையும் எங்க குடும்பமாக நினைத்து ஆதரித்தோம்; நல்ல சிந்தனைகளை வளர்த்தோம்; ஆன்மீக விஷயங்களை கற்றோம்; நல்ல தலைவர்களை இந்த நாட்டுக்கு கொடுத்தோம்; நல்ல தலைமுறைகளை வளர்த்து இந்த நாட்டுக்கு கொடுத்தோம்; இதை எல்லாம் செய்யும்போது அறிவியல் வளர்ச்சி மெடிக்கல் டிரீட்மென்ட் இந்த அளவு இல்லை; "
ஆனால் இன்றைய தலைமுறையினர் , செக்ஸ் , பணம், குடி, கொண்டாட்டம் என்று ஊர் சுத்தி சுத்தி நாங்கள், எங்கள் தந்தையர்கள், நம் பாட்டன் பாரதி என்று எல்லோரும் தங்கள் வாழ்க்கையை உங்களுக்காக தியாகம் பண்ணதை யாரும் நினைக்கவே மறுக்கிறீங்களே ?"
(நந்தா மௌனமாக இருந்தான்; தாத்தா இதுவரை இப்படி பேசியதைல்லை; என் தவறான பழக்கங்களை கண்டிப்பார்; நான் கேட்காத போது என்னுடன் பேசாதிருப்பார்; )
தாத்தா மேலும் தொடர்ந்தார் .."சரி, எங்க காலத்தை விடுங்கடா, உங்க காலத்துக்கே வருவோம்; நம்ம நாட்டோட எல்லையில் நமக்காக போராடும் உன் வயது பையன்களின் தியாகம் ? ஊரை விட்டு, உறவுகளை விட்டு, எங்கோ உனக்காக கஷ்டப்படணும்னு அவனுக்கு என்ன தலை எழுத்து ?
அதுக்கு உங்க கைம்மாறு என்ன ?
குறைந்த பட்சம் ஒரு நல்ல பிரஜையாக இருக்க முயற்சி பண்ணலாம் இல்லையா ?"
உங்க வேலைகளை நல்லபடி செய்து , நம் போன்ற ஆண்மகன்களை இந்த உலகுக்கு கொண்டுவரும் பெண்களை, மகாகவி பாரதி போல, இராமக்ரிஷ்ணர் போல துதிக்கவிட்டாலும் உன்னை பெற்ற தாயும் ஒரு பெண் என மதிக்கலாம் இல்லையா ?"
தாத்தாவின் ஒவ்வொரு கேள்வியும் என் கண்களில் நீரை வரவழைத்தது.
தாத்தா, " ஒழுக்கமும், நேர்மையும் வெறும் நூல்வேலி தான்; வெறும் நூல் வேலி தான்னு ஒரு முறை நீ தாண்டினாலும் அது அறுந்துடும்; பிறகு எப்போதுமே அதை சரி பண்ண முடியாது;"
வாசு," தாத்தா , ஏன் அதை நூல் வேலின்னு சொல்றீங்க ? அது ஸ்ட்ராங்கான இரும்பு வேலி யாக இருந்தா நல்லாருக்குமில்ல; என்று சிரித்தான் ;
தாத்தா," உன் கிண்டல் புரியுது; இந்த மாதிரியான எல்லா புனிதமான விஷயங்களும் நூல் போன்று மென்மையானது தான் ; தாய்மை போன்று; ஒரு குழந்தை பனி குடம் உடைந்து வந்த பின்னும் ஒரு தாய் எப்படி பழைய படி நடமாட முடிகிறது ? அது தான் கடவுளின் கருணை;
அது போல தான் நம் உணர்வுகள் நூல் வேலி போன்றது ; "
நந்தா, " தாத்தா புரியலை ;" கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்; "
தாத்தா," ஒரு குழந்தைக்கு தாய் இல்லை ; இன்னொரு பெண் அந்த குழந்தையை வளர்க்கிறாள்; அப்போ அந்த குழந்தை அதை உணர்ந்து தன் புதிய தாயை தன்தாய் போல ஏற்று கொள்ளணும்;
காந்தி சொன்னது போல நூறு குற்றவாளி தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டனை அனுபிவிக்க கூடாது; "
ஒரு ஆணோ , பெண்ணோ ,தன்னுடன் பிறவாதவர் களையும் தனது சகோதர சகோதரியாக நினைக்க முடியும்; இது எல்லாமே உணர்வுகள் தான்; அதற்கான வேலிகள் தான் நம் நாட்டின் உறவு முறைகள்; நூல் வேலி தான் ; வெறும் நூல் தான் என்றாலும் ஒரு மஞ்சள் கயிருக்கு மாங்கல்யம் என்ற பந்தம் எப்படி வருது ?
நம் பாரதம் நமக்கு கொடுத்த கொடை நம் சுவாமி விவேகானந்தர்;
எண்ணமே வாழ்க்கை; உயர்வானதை நினை என்றார்; நூல் வேலியை எவன் ஒருவன் அறு படாமல் வாழ்ந்து காட்டுகிறானோ அவனே வாழ்வை வென்றவன்; ";
நந்தா, " புரியுது தாத்தா; வேலி நல்லவர்களை தண்டிக்கவும் கூடாது; கெட்டவர்களை தண்டிக்காமல் விடவும் விடாது; இந்த வேலியை இறைவனால் மட்டுமே உணர்த்த முடியும்; தவறியவர்களுக்கு அவர்களுக்கு மட்டுமே புரியும்படி தண்டனையும் கொடுக்கும்; எனக்கு வந்த கனவு போல; இல்லையா தாத்தா?” என்றான்.
தாத்தா சிரித்தார்; வாசு புரியாமல் முழித்தான்;
வாசக நண்பர்களே, நந்தாவை நீங்க புரிஞ்சிக்கிட்டிங்களா ? நந்தா போல வாழ்வில் எந்த கொள்கையும் இல்லாமல் வாழும் இளைய தலைமுறைகள், தனது செயல்களால், கொள்கையோடு வாழும் நல்ல உள்ளங்களை உடைத்திடாமல் இருப்பார்களா ?
பிறரின் வீழ்ச்சியில் உன் வாழ்க்கை நிலைக்காது...
அது பணமானாலும் சரி; குணமானாலும் சரி;!
நீயும் வாழு; பிறரையும் வாழவிடு ;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (4-Nov-20, 1:19 am)
சேர்த்தது : Samyuktha
பார்வை : 159

மேலே