காதலின் கடற்கரை

என்னவனை கேட்டேன்
கடற்கரை‌செல்லலாமா? என்று – அவன்
என்னவன்ஆகும் முன்பு–அவனின்
கண்பார்வையினை - என்
கண்களால் கண்டு கேட்டேன்;
சொல்லிவிடாதே! நீ கடற்கரை
சென்றதில்லை ; என்று

கள்ளச்சிரிப்புடன் சொன்னான் - உன்னோடு
இணைந்து போகத்தான்
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் போன்று!
கன்னம் சிவக்க சிரித்தோம் நாங்கள்…

அடுத்தசந்திப்பு கடற்கரையில்..
ஆட்கள் அல்லாதநேரத்தில்…

கடலினைகண்டதும்
கண்டதும்ஓடினேன்- போலி
கோபத்துடன்கூறினான்
குறும்புத்தனம் செய்யாதேஎன!- சற்று
கடுகடுப்புடன் திரும்பிப்பார்த்தேன்
கடற்கரை மணலில் காலால்
கோலமிட்டுக் கொண்டிருந்தான்
கொஞ்சும் குழந்தையாக!

கடலினை விட்டு விலகி
கடற்கரையில் கால்பதித்துக் கொண்டிருந்த
கள்வனின் கரம்பற்றி இழுத்தேன்..
கடல்நீரை நோக்கி…திடுக்கிட்டு
சத்தமிட்டான் என்பெயர்கூறி ஆனால்மெதுவாக…
சமுத்திரதீர்த்தத்தை
சற்றுஎன் முகத்தில்வாரினான்…அம்மம்மா
உப்புநீரும் இனித்தது
உயிரானவனின் கைபட்டதால்

கதிரவன் கடலுக்கள் மூழ்கும்வரை
களிப்புற்று மகிழ்ந்திருந்தோம்
கடல்தாயின்குழந்தையாக!- சமுத்திரத்தினுள்

தொலைந்துகொண்டிருக்கும் செஞ்சூரியனை என்
தோளில் கரம்பதித்துகாட்டினான்- என்னவோ
கதிரவனின் ஒளியைவிட
கண்களைபறிக்கும் ஒளியை- அவனின்
கம்பீரமுகத்தினுள் கண்டதில்
கண்இமைக்க மறந்தேன் நான்–பின்

கண்மூடி அயர்ந்தோம்
கடற்கரைமணலில் ; பெருமூச்சுடன்

சற்றுதலை சாய்த்துகேட்டேன்
சந்தோஷம் அடைந்தாயா! -என்று
சந்திரனின் ஒளியைபோல் பிரகாசத்துடன்
சலசலத்தான் ம்ம்ம் …என்று

அசட்டுச்சிரிப்புடன் கூறினேன்
நான் உன்னுடன் இருந்தால்–பெறுவாய்
நல்லவைகள்மட்டும்

சட்டென எழுந்தமர்ந்தவன் சொன்னான்
சற்று தயக்கத்துடன்
சங்கடங்கள் நிறைந்தது என்வாழ்க்கை- அப்படியானால்
நிச்சயம் உன்வாழ்வில் நான்வேண்டும்
நித்தமும் மகிழ்வினை நீ பெறுவதற்கு

செவ்விதழ்களின் ஓரங்களை சற்றுவளைத்து
சிரித்தோம்; வினோத‌உணர்வுடன்

ஓ…. என்ற அலைகளின் இரைச்சலுடன்
ஒருவருக்கொருவர்பார்த்திடாமல் எதிர்திசைநோக்கினோம்
மெதுவாகதிரும்பி; நோக்கினோம் ஒருவரையொருவர்
மௌனம்குடிகொண்டது ; இதழ்களில்
மெல்லியபுன்னகை மட்டும் நிலைத்திருந்தது.

உப்புக்காற்றினை
உள்ளிழுத்துக்கொண்டு
சட்டென இருவரும்
கண்ணோடுகண்நோக்கி;கேட்டோம்
ஒரேகணத்தில்
ஒரேவாக்கியத்தை!
“என்னைகாதலிப்பாயா”?..

சுவாசிக்கவும் மறந்து திகைப்புடன் கேட்டேன்! – நீ
சுயநினைவுடன் இருக்கிறாயா என்று!

அசட்டுச் சிரிப்புடன் நுனிவிரலால்
தலையை தட்டினான்;மணலில் விழுந்து
தள்ளாடிப்போனேன்; மகிழ்ச்சி‌வெள்ளத்தில்

மூன்று எண்ணுவதற்குள் முடிவினை கூறசொன்னான்;
முதல் எண்ணினை எண்ணுவதற்குள்
மணலினைவிட்டுப் பிரிந்து – கூச்சலிட்டேன்
ஆம்! ஆம்! ஆம்….- என்று
மனம்கவர்ந்த
மன்னனின் கரம்பற்றினேன்;
மறுகரத்தால் என்கன்னம் பற்றினான்
ஆம்….! இப்போது காதலர்கள் ஆனோம்…*****************

எழுதியவர் : ஜீவரோசினி (18-Nov-20, 1:00 pm)
பார்வை : 583

சிறந்த கவிதைகள்

மேலே