குறும்பா ஹைக்கூ கவிஞர் இரா இரவி

குறும்பா ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

முட்டாளை தேர்ந்தெடுக்கவில்லை
இரண்டாம் முறை
அறிவாளிகள் அமெரிக்கர்கள் !

கற்றது கையளவு
உணர்த்தியது
கற்றவனுக்கு !

எல்லாம் தெரிந்தவர்
எவருமில்லை என்பது
தெரியவில்லை !

அடி சறுக்கியது
யானைக்கும்
விழுந்தது கிணற்றில் !

ஏழைகளால்
பிடிக்கமுடியவில்லை ஓடுகிறது
விலைவாசி !

தென்படவில்லை
நல்லவர்
அரசியலில் !

கோடித்துணியின்றி குடிமகன்
கோடிகள் ஊழல்
அரசியல்வாதிகள் !

மலிந்துவிட்டனர்
வாய்சசொல்வீரர்கள்
அரசியலில் !

அரசியல்வாதிகள் போலவே
கல்வி நிறுவனங்கள் வாக்குறுதி
வேலை உறுதி !

தென்றல் நன்மை
புயல் தீமை
இனிது மேன்மை !

கடவுளின் பெயரால்
மனிதர்கள் சண்டை
மவுனமாக கடவுள் !

அபிசேகம் என்று
வீணடிப்பதை
விரும்பவில்லை கடவுள் !

இலவசமாக அன்று
எட்டாக்கனியாக இன்று
கல்வி !

ஏன் படித்தாய் ? என
போதிமரமாக
கல்விச்சாலைகள் !

தலை துவட்டினான்
நனைந்த மலர்களுக்கு
ஆதவன் !

அறுவடையின் போது
அவசியமில்லை
மழை !

அளவிற்கு மிஞ்சினால்
ஆபத்து
மழை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (22-Nov-20, 9:15 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 201

மேலே