காயம் கண்டு கலங்காதே

நூறு முறை தோல்வியை கண்டாலும் அயர்ந்து தபுதல் வேண்டாம்
உன் மனம் நீரற்ற நிலம் போல் போழ்வு கொண்டாலும் கலங்காதே
காயங்களை உனக்கு பரிசலிக்கும் கயவர்களான நோனாரை கண்டு
அரம்பு செய்யும் மழலை போல
வலிகலை கண்டு அஞ்சினால்
கருநிலமாகிவிடுவாய்
முடுகு கொண்டு முன் செல்ல துணிவாய்
சிறு நீறு என்று எண்ணி ஏளனம் செய்பவர்கள் முன்
உன் நசை அறிந்து அவ்வழியே
மிஞிறு போல் முன் செல்
குழிசி நீர் போன்று தேங்கிவிடாதே
அருவி நீரை போல பயணம்
செய்தால் சமுத்திரம் காணலாம்
உன்னை கண்டு பின் நீயே பொசிவு கொள்வாய்
வெற்றி மனாலம் உனதருகே

எழுதியவர் : Deepika.S (24-Nov-20, 3:29 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 1461

மேலே