விழலுக்கு நீராய்- கரு நிலத்து நீர்

இளயவனா இருந்தாலும்
பாசத்த கொட்றதுல வேகத்தகாட்டுவயே
தூக்கி வளத்த சின்னத்தாயினு
ஓம்புள்ளகிட்ட சொல்லுவியே
உறக்கத்தில் நான் உளற
அரம்பாய் அத ரசிக்கும் ஆச தம்பி

நோனார் பார்த்திருக்க
எம் பாசமெல்லம் வேஷமுன்னு
விஷம் அள்ளி வீசிபுட்ட

குழிசி உடைவது போல்
நம் நேசம் தபுதலாக
நீறுபோல நொறுங்கி போயி
நெத்தியில அடிச்சுகிட்டு
நெல கொலைஞ்சு நிக்கிறனே

பொல்லாத பொசிவுக்கு
காரணந்தா தெரியலையே
கண்ணு ரெண்டும் அழுதழுது
மனாலமாய் செவந்திருக்க
மிஞிறு போல் முகுடு எடுத்து
ஒன்ன பாக்க ஓடியாரென்

எனக்கான நசை யின்னு
என்னைக்குமே வாழலையே
நமக்குள்ள போழ்வு வர
நா செஞ்ச தப்பென்ன

உம்மேல எம்பாசம்
கரு நிலத்து நீராச்சே

எழுதியவர் : இவானா (24-Nov-20, 3:10 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 112

மேலே