அன்பு அமைதி கருணையோடு 2021 புதிய ஆண்டே வருவாய்
புது வருடம் புதிய தொரு வாழ்வளிக்கட்டும்
மனித நேய பண்புகளை மனம் விதைக்கட்டும்
சாதி மத வெறியெல்லாம் அழிந்தொழியட்டும்
அன்பு கருணை பாசம் நேசம் பொங்கி வழியட்டும்
=
இந்தியாவின் பிரதமர்க்கு அன்பு சுரக்கட்டும்
உலக தலைவர் மனதில் மனித நேயம் மலரட்டும்
வாழும் பூமி பசுமை போர்த்தி வளமை காணட்டும்
வள்ளுவனின் வாழ்வியலின் வழியில் செல்லட்டும்
=
வருங்கால சந்ததிகள் கோள்கள் கடக்கட்டும்
அண்டம் விட்டு அண்டம் கடந்து வாழ்வை தொடங்கட்டும்.
பெருவெடிப்பு கொள்கையினை நன்கு ஆயட்டும்
கருந்துளையின் உள் சென்று உண்மை கொணரட்டும்
=
பிரபஞ்ச சக்தி எங்கு என்று தேடி காணட்டும்
அந்த அன்பு நிறைந்த சக்திக்கு நம் நன்றி கூறட்டும்- சுயநல
மனிதரை ஏன் படைத்தாய் என்று வினவட்டும்
அன்போடு அனைவருமே அகமகிழ்ந்து வாழட்டும்
===============================================