வண்ணம் -104
வண்ணம் 104
************
தனத்த தாத்தந் தனதானா
தனத்த தாத்தந் தனதானா
கருப்பர் கூட்டங் களைவாயே
கனத்த வேற்கொண் டெறிவாயே
விரட்டி யோட்டும் படைவீரா
வியப்பி லாழ்த்துந் தணிகேசா
வருத்தம் போக்குந் திறலோனே
வளத்தை யூட்டுங் கனிவோடே
சிரத்தை யாட்டுந் தமிழ்வேளே
சிரித்து மாற்றந் தருவாயே!
சியாமளா ராஜசேகர்