வேதங்கள்

இறைவன் அருள்மொழி வேதம்
அதை செவியால் கேட்டு
கிரஹித்து புரிந்துகொண்டு சீடருக்கு
ஓதி வந்தார் மாமுனிகள்
செவிவழியாக இப்படி வந்த
வேத வாக்கு அத்தனையும் வியாசரால்
எழுத்துருப் பெற்றது அவைதான்
ரிக், யஜுர், சாம அதர்வண
எனும் வேதங்கள் நான்கு
இதையே தமிழில் மறையாய்த் தந்தார்
நம்மாழவார் அவைதான் திருவாய்மொழி
திருவிருத்தம் திருவந்தாதி திருவாசிரியம்
முறையாய் குருமூலம் இவ்வேதம் கற்போம்
இறைவன் அருள்மொழிகள் அறிந்து
வாழ வலி தேடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-21, 9:59 am)
Tanglish : vethangal
பார்வை : 81

சிறந்த கவிதைகள்

மேலே