காற்றின் கைகளோ

இணைக்குறள் ஆசிரியப்பா

பூமியும் தனித்தே உருளத் தொடங்கி
பூதங்கள் அதனைத் தழுவி
மேகமது வானில் பறந்து
மேன்மை மிகுந்த நிலையில்
காற்றின் கைகளோ காத்திட
நீரின் துளிகள் தூவியே
நிறைந்த பசுமை பெற்றிட
உணவும் ஊரினில் பெருகியே
உயிர்கள் உண்டாகி முற்றியே
பரிணமித்து அறிவு பெற்று
வாழ்நிலை அறிந்து சிந்தித்து
மேனிலை காணவே தேடியும்
வானிலை இடறினை எதிர்த்து
வாழ்ந்திட இடங்கண்டு தங்கி
வாரிசு பெற்றிட கலவி
வம்சத்தை ஆக்கின வனத்து மாக்களே .
------ நன்னாடன்
இணைக்குறள் ஆசிரியப்பா

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-21, 7:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 73

மேலே