ஏழொளி நிறத்தின் எழிலில்
இணைக்குறள் ஆசிரியப்பா
ஏழொளி நிறத்தின் எழிலில் தெளிவாய்
எத்திக்கும் பொலிவாய் கலையாய்
எம்மனமும் ஈர்க்கும் நீராய்
எந்நாளும் இயல்பாய் நிலைத்த
ஏழ்புரவி பூட்டிய கதிரே போற்றியே
மண்ணில் நீர்சேர்த்து விதையில் வினையாற்றி
மகத்துவம் தெரியவே முளைத்து
மரமாய் மாபெரும் உருவாய்
மலர்கள் பலவற்றை ஈன்றிய
மகந்தரத்தில் தோன்றிய அதிசய தருவே
அந்தரத்து விளக்கே அதிசய அகிலனே
அனைத்துயிர் நெடாயுள் காணவே
அல்லும் பகலிலும் துள்ளியே
அணுவுக்கும் உணவிடும் அட்சயமாய்
அகிலங் காக்கும் இறைவனே தொழுதே
மழையைப் பெற்றிட தாயென மரமுமே
மலையில் பொழிந்து அருவியாய்
மறுப்பிறப்பு எய்யவே கதிரும்
மகத்துவ தந்தையாய் இருந்து
மாதவம் செய்வது மண்ணின் உயிர்கே
------- நன்னாடன்.

